• Apr 01 2025

500 கோடிக்கு டார்கெட் வைக்கப்பட்ட குட் பேட் அக்லி.. இணையத்தில் லீக்கான போட்டோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நடித்து வருபவர் தான் அஜித்குமார். தற்போது இவருடைய நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் இருக்கும் நிலையில், ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் ரிலீஸ் பற்றியும்  படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கப்படும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக கூறப்பட்டது. எனினும் கங்குவா படத்தில் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஹிட் அடிக்காத காரணத்தினால் அவர் அதிலிருந்து தூக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இதன் காரணத்தினால் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 10ல் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் அதில் தாமதம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி உள்ளன. தற்போது அதில் அஜித் கேங்ஸ்டர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

பார்க்கவே வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அஜித்தை திரையில் காணும் ரசிகர்கள் செம்ம குஷியாக இருப்பார்கள் என எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன. இதனால் பொங்கலுக்கு வெளியாகும் இந்த திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டும் என பேசப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement