• Dec 04 2024

''பொறுத்தது போதும் பொங்கி எழு...'' ட்ரெண்டிங்கில் விடுதலை 2 பாடல்...

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

Viduthalai: Part 2 First Look Out: The Fury Of Vaathiyar Unfolds |  TimelineDaily

இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விடுதலை பாகம் 2 டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது.

"d_i_a

Viduthalai 2: Soori and Vijay Sethupathi Begin Dubbing for Vetrimaaran's  Viduthalai Part 2 | Times Now

சமீபத்தில் இப்படத்தின், 'தினம் தினமும்' என்ற முதல் பாடல் வெளியானது. இளையராஜா குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 'பொறுத்தது போதும்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இது ரசிகர்களினால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement