• Jan 15 2025

போலியை அம்பலப்படுத்துவது என் வேலையா..? கோமதி பிரியாவின் திடீர் போஸ்ட்.!! வைரல் போட்டோஸ்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கோமதி பிரியா. இவர்  மதுரையைச் சேர்ந்தவர்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கோமதி பிரியா ஆரம்பத்தில் படிப்பு. ஐடி கம்பெனியில் வேலை அதன் பின்பு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் என களமிறங்கியுள்ளார். ஆனாலும் ஆரம்பத்தில் இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் தான் கிடைத்துள்ளன.

d_i_a

பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்து பல தோல்விகளை சந்தித்துள்ளார் கோமதி பிரியா. அதன் பின்பு வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்தார். எனினும் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை பெற்றுக் கொடுத்த சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் காணப்படுகின்றது.


இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வெற்றி மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக்கில் கோமதி பிரியா கதாநாயகியாக நடிக்கின்றார். கிட்டத்தட்ட ஐந்துக்கு மேற்பட்ட மொழிகளில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் தெலுங்கு சீரியல் ஒன்றிலும் கோமதி பிரியா நடித்து வருகிறார்.


இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படும் கோமதி பிரியா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். 

மேலும் இவர் ஷூட்டிங் டைம்மில் ரிலீஸ் செய்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சக நடிகர்கள் கலகலப்பாக தெரிவித்து இருந்தார்கள். தற்போது கோமதி பிரியா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement