பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா தற்போது வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கின்றார். இந்நிலையில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என முன்னரே அறிவித்திருந்த நிலையில் தற்போது புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர்.
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகின்றார். அத்தோடு ஆர்.ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 44 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்கள் பலநாட்களாக எதிர்பார்த்திருந்த வாடிவாசல் திரைப்படம் தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் இணையத்தில் கசிந்தன ஆனால் அது உண்மை இல்லை. சூர்யா தான் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார் என்பதற்கு தயாரிப்பாளர் தாணு ஒரு புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் , தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தினை பரந்த தயாரிப்பாளர் "அகிலம் ஆராதிக்க வாடி வாசல் திறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரியவருகிறது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
Listen News!