தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை வென்றவர் தான் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், பேரன்பு, தங்க மீன்கள் போன்ற படங்கள் ஹிட் அடித்துள்ளன.
இதைத்தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் சூரி, அஞ்சலி, நிவின் பாலி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஏழு கடல் ஏழுமலை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது பி ஹவுஸ் ப்ரொடெக்ஷன் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
d_i_a
ஏழு கடல் ஏழுமலை படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இடம்பெற்ற ரோட்டர்டாம் சர்வதேச விழா மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. அதில் கற்றது தமிழ் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அமைக்கப்பட்டதாக பல கருத்துக்கள் பரவின. ஆனாலும் இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன
இந்த நிலையில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்போது சூரி நடிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படும் நிலையில், இந்தப் படமும் ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என நம்பப்படுகிறது.
Listen News!