சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இதற்கு முதல் குடும்ப கதை கொண்ட செண்டிமெண்ட் படம் ஆக்சன் படங்களை இயக்கி வந்த சிவா, முதன்முறையாக வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாக கங்குவாவை இயக்கியுள்ளார்.
கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதாணியும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் கருணாஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ், ரெடின் கிங்ஸ்லி என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் அனைத்து மொழிகளுக்குமே சூர்யாவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த உள்ளனர்.
கங்குவா திரைப்படம் பாகுபலி ரேஞ்சுக்கு இருக்கும் என கூறப்படுவதால் அந்த படத்தின் பிசினஸும் சூடுப் பிடித்துள்ளது. குறிப்பாக கிட்டத்தட்ட 2000 கோடி வரை வசூலிக்கும் என இதன் தயாரிப்பாளர் ஞானவேல் கூறியிருந்தார். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கங்குவா திரைப்படம் காணப்படுகின்றது.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே விஜய் நடித்த கோட் படத்தையும் ரஜினி நடித்த வேட்டையன் படத்தின் சாதனையையும் முறையடைத்துள்ளது.
அதாவது தெலுங்கு மாநிலங்களில் விஜய், ரஜினி போன்ற பிரபல நடிகர்களுக்கு மவுசு அதிகமாக இருக்கும். இதனால் விஜயின் கோட் பட தெலுங்கு ரிலீஸ் உரிமை 17 கோடிக்கும், ரஜினியின் வேட்டையன் பட தெலுங்கு உரிமை 16 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களும் தான் தமிழ் படங்களிலேயே தெலுங்கு உரிமை அதிகமான தொகைக்கு விற்பனை செய்த படங்களாகும்.
தற்போது இதை முறையடிக்கும் விதமாக கங்குவா படத்தின் தெலுங்கு உரிமை சுமார் 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோட் மற்றும் வேட்டையன் பட சாதனையை கங்குவா முறையடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!