தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்தது தனக்கென ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். தற்போது "DD Next Level" திரைப்படத்தில் நடித்துள்ளார். "கோவிந்தா கோவிந்தா"என்ற பாடலின் சர்ச்சையால் நடிகர் சந்தானத்திற்கு ரெட் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின் மென்ட் தயாரித்த"DD Next Level " என்ற படத்திற்கான புரொமோசன் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் கீதிகா திவாரி, செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் எனப் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் "கோவிந்தா கோவிந்தா" இடம் பெற்ற என்ற பாடலை தடை பண்ணனும் என்று கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் பாடலை படத்தில் இருந்து நீக்குமாறும் கூறி நடிகர் சந்தானத்தின் மீதும் படகுழு மீதும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட் நோட்டிஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது படத்தில் இடம் பெற்ற பாடலுக்கும் 100 கோடி கேட்டு நோட்டிஸ் அனுப்பியது படகுழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!