• Oct 26 2025

கவினின் ‘KISS’க்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு...!ரசிகர்கள் சந்தோஷத்தில்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவர் சதீஷ், தற்போது இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரின் இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படம் ‘கிஸ்’. டாடா மற்றும் ப்ளடி பெக்கர் போன்ற வெற்றி படங்களுக்குப் பிறகு, இத்திரைப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.


இப்படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, ஆர்சி பிரனவ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இசையமைப்பாளராக ஜென் மார்டின் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. காதலர்கள் லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சிகளைப் பார்த்துக் கவினுக்கு, அந்த காதலின் முடிவுகள் குறித்து தோன்றும் எண்ணங்கள் தான் கதையின் மையமாக அமைகின்றன. காதல், உணர்வு, யதார்த்தம் ஆகியவற்றை கலந்துபொருத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.


படத்திற்குத் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ‘கிஸ்’ திரைப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.

Advertisement

Advertisement