• Jan 19 2025

பத்மஸ்ரீ விருதினைப் பெற்ற பிரபல பாடகர் உயிரிழப்பு- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் பல பாடல்களைப் பாடி பிரபல்யமானவர் தான் உஸ்தாத் ரஷீத் கான். இவர் இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் தேர்ந்தவராகவும் விளங்குகின்றார்.

இவருக்கு கடந்த 2022ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவின் பீர்லெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் அவர் காலமானார். 


55 வயதான ரஷீத் கானின் மறைவை கேள்விப்பட்ட மக்களும் திரைலகப் பிரபலங்களும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.ரஷீத் கானின் உடல் இன்று மாலை 6 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நாளைய தினம் குடும்ப முறைப்படி அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தன்னுடைய மாமா நிசார் ஹுசைன் கானிடம் துவக்கத்தில் இசையை கற்றுக் கொண்ட ரஷீத் ரஷீத் கானின் மறைவு திரையுலக பிரபலங்கள், ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement