• Jan 19 2025

ஷுட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை புதிய கெட்டப்பில் சந்தித்த நடிகர் விஜய்- இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 68வது படத்துக்கு The Greatest of All Time என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறாராம் வெங்கட் பிரபு.

 போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் தான் இந்த படத்துக்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் வரும் மார்ச் மாதத்துக்குள்ளே படப்பிடிப்பை முடித்து விடவும் வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.


லியோ படத்தை ஆயுத பூஜை ரிலீஸாக வெளியிட்ட தளபதி விஜய் இந்த முறையாவது தீபாவளிக்கு படத்தை வெளியிடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மார்ச் மாதமே ஷூட்டிங் முடியப் போகிறது என்கிற தகவலால் கங்குவா படத்துக்கு போட்டியாக ஏப்ரல் மாதமே வெளியாகுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படத்திற்கான ஷுட்டிங் திருநெல்வேலியில் இடம் பெற்றுள்ளது.இதனால் விஜய்யைப் பார்ப்பதற்காக அங்கு ரசிகர்களும் கூடி இருக்கின்றனர்.அப்போது விஜய் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். இது குறித்த வீடியோ தான் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement