• Mar 26 2026

சிக்ஸு.. சிக்ஸு... படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் விஜய்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய். 1984 ஆம் ஆண்டு வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.பின்னர் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கின்றார்.இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.


டைம் ட்ராவல் அடிப்படையில் தான் இந்த படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதை பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தது.நடிகர் விஜய் தற்போது படக்குழு உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் விஜய் ஒரு பந்து சிக்ஸ் சென்றதாக தனது டீமுக்காக மற்றவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement