விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இன்று 43 வது நாளில் காலடி பதித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதியாக திவாகர் எலிமினேட் ஆகி வெளியே சென்று இருந்தார் .
இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பார்வதி கொடுக்கப்பட்ட டாஸ்கை வாசிக்கின்றார். அதன்படி அவர் 'உங்க மனசுல யாரு?' என்ற டாஸ்கை வாசிக்கின்றார்.
அதில் இந்த நபரை நான் எனக்கான காம்படிஷனா பார்க்கின்றேன், இந்த நபர் என் லிஸ்டிலேயே இல்லை என்று இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.

அதற்கு பதில் அளித்த பார்வதி, என்னுடைய ஆண் வர்ஷனாக எப்ஜெ யை பார்க்கின்றேன் என்றார். பின்பு வியானா, என்னுடைய லிஸ்டிலேயே இல்லை என்றால் அது ரம்யா தான். போனால் கூட பிரச்சினை இல்லை. நான் இப்படித்தான் விளையாடுவேன் என்று இருப்பதாக ரம்யா பற்றி கூறுகின்றார்.
அதன் பின்பு சுபிக்ஷாவும் ரம்யாவை கூறுகின்றார். அதற்கு பின்பு பேசிய ரம்யா, எனக்கு இவங்க ஒரு ஆளே இல்லனா நான் வியானாவை சொல்லுவேன் என்று கூறுகின்றார்.
இறுதியில் சாண்ட்ரா பேசும்போது, சாண்ட்ரா VS கனி என்ற மாதிரி ஒரு ஃபார்முலா உருவாக்கி வச்சிருக்காங்க.. ஆனா எனக்கு அப்படி ஒருத்தவங்க லிஸ்டிலேயே இல்ல என்று கனியை பற்றி கூறுகின்றார்.
Listen News!