சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா சமையற்கட்டில் நின்று கல்யாணி பற்றி யோசித்து கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் ரோகிணி வந்து விஜயாவுக்கு டீ போடுமாறு கேட்க, மீனா அவரை சரமாரியாக திட்டுகின்றார்.
மேலும் என்னால் இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த குடும்பத்திற்கு துரோகம் பண்ணுகின்றேன் என்று பேச, தயவு செய்து இந்த உண்மையை சொல்லிவிடாதிங்க. அப்படி எல்லாருக்கும் உண்மை தெரிந்தால் நானும் க்ரிஷும் உயிரோடு இருக்க மாட்டோம் என்று மீண்டும் மிரட்டுகிறார் ரோகிணி.

அதன் பின்பு மீனாவின் மனசாட்சி மீனாவிடம், இந்த குடும்பத்துக்கு உண்மையை மறைக்கின்றாயா? உன் புருஷனுக்கு உண்மையை மறைக்கின்றீயா? இந்த விஷயம் தெரிய வந்தால் இந்த குடும்பம் சிதறிப் போய்விடும். அப்போ என்ன செய்யப் போகிறாய் என்று பேசுகின்றது. இதனால் மீனா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் மனோஜ், ரோகிணியும் கான்ட்ராக்ட் ஆர்டர் எடுப்பதற்காக செல்கின்றார்கள். அதன்படி புதிதாகக் கட்ட உள்ள அப்பார்ட்மெண்டுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கான ஆர்டரில் முதலாவதாக 10 லட்சம் ரூபாய் செக் கொடுக்கின்றார். இதனை ரோகிணியே வாங்கித் தருமாறு மனோஜ் கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!