• Oct 30 2024

ஊட்டி போனா ஐஷுவ தடவி தூங்க வைக்க முடியுமா? தான் வந்த காரணத்தையே மறந்து புலம்பும் நிக்சன்! கேலிக்குள்ளாகும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷு வெளியேறியது நிக்சனை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் அவர் பார்க்கும் போட்டியாளர்களிடம் எல்லாம் ஐஷு வெளியேறியது குறித்து புலம்பி வரும் காட்சியின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


அதன்படி, பிக் பாஸ் வீட்டிலுள்ள  சகப் போட்டியாளர்களான விக்ரம்,அக்ஷயா, ஜோவிகா உள்ளிட்டோரிடம் ஐஷு பற்றி புலம்பி கொண்டு இருந்தார்.

அதன்படி அவர் கூறுகையில், ஐஷு ய நான் ஊட்டி சென்றா பார்க்க முடியுமா? ஒரு வேலை பார்த்தாலும் இங்க இருந்த போல பக்கத்தில் உட்கார வைத்து தடவி தூங்க வைக்க முடியுமா? என்று புலம்புகிறார்.

இது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பார்வையாளர்கள் ஆச்சரியமாக இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

நிக்சனின் இந்த வீடியோவுக்கு கேலியும் கிண்டலுமாக  நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement