• Oct 13 2024

மீண்டும் பெட்டியுடன் வீட்டை விட்டு கிளம்பிய எழில்.. செழியன் கேட்ட கேள்வி?

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செழியன், எழில், இனியா ஆகியோர் தாத்தா தங்களுக்கு எழுதி வைத்த லெட்டரை படித்து அழுகின்றார்கள். இறுதியில் எல்லாரும் கண் கலங்கி அழுது கொண்டிருக்க ராமமூர்த்தியின் ஆத்மா வாசலில் நின்று பார்க்கின்றார்.

இன்னொரு பக்கம் கோபி கவலையில் நன்றாக குடித்துவிட்டு வீட்டிற்கு போக மறுகின்றார். ராதிகா திரும்பத் திரும்ப கால் பண்ணவும் ஆன்சர் பண்ணவில்லை. இதனால் அவருடன் இருந்த நண்பர் ராதிகாவுக்கு விஷயத்தை சொல்ல, ராதிகா பாருக்கு  கிளம்பி வந்து கோபியை அழைத்துச் செல்கின்றார்.

இதை தொடர்ந்து எழில் அமிர்தாவிடம் கிளம்பலாம் என சொல்லுகின்றார். ஆனாலும் அமிர்தா இழுத்தடிக்க இப்ப போனால் தான் வீட்டைப் பார்த்து எல்லா வேலைகளையும் முடிக்க முடியும் என்று சொல்ல, சரியென அவரும் கிளம்பி வருகின்றார்.


அதன் பின்பு பாக்கியாவிடம் ஈஸ்வரியிடம் சென்று வருவதாக எழில் சொல்ல, ஈஸ்வரி மறுக்கின்றார். ஆனாலும் தாத்தா சொன்னபடியே பெரிய ஆளாகிய பிறகு தான் வருவேன் என எழில் சொல்லி கிளம்பி செல்கின்றார். 

செழியன் எழிலிடம் நீ இல்லாமல் நான் எப்படி தனியா எல்லாத்தையும் கவனிப்பது என்று கேட்க, எதுவும் என்றால் எனக்கு கால் பண்ணு பத்து நிமிஷத்துல நிப்பேன் என அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பி செல்கின்றார்.

Advertisement