• Jan 19 2025

நடிகை ஷில்பா ஷெட்டியின் பிரமாண்ட வீட்டில் இத்தனை வசதிகள் இருக்கின்றதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் தான் ஷில்பா ஷெட்டி. தமிழில் இவர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார்.அதே போல விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் கூட ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.


 இவர் கடந்த 2009-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டி ஐபிஎல்லில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக உள்ளார். இந்த நிலையில், அவர் மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் கட்டியுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதில் பேட்டி ஒன்றில் கூறிய ஷில்பா ஷெட்டி, “என்னுடைய கினாரா வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அதிலிருந்து கிடைக்கும் பரந்த கடலின் காட்சி தான். காலை எழுந்ததும் அதை பார்ப்பதாக இருக்கட்டும், இரவு தூங்கும்போது கடல் அலைகளின் ஓசைகளாக இருக்கட்டும் அவ்வளவு அழகாக இருக்கும். 


ஆனால் இந்த வீட்டில் எனக்கு பிடிக்காத விஷயம் அதை பராமரிப்பது தான். மிகப்பெரிய வீடு என்பதால் இதனை பராமரிப்பது கஷ்டமான வேலை என ஷில்பா ஷெட்டி கூறி உள்ளார். இந்த வீட்டில் இடம்பெற்றுள்ள அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பழங்கால பொருட்களாக இருக்க வேண்டும் என தேர்வு செய்து வாங்கி வைத்துள்ளாராம்.


தன் வீட்டில் உள்ள டிராயிங் ரூமில் வரிக்குதிரை போன்று அச்சிடப்பட்ட குஷன்களை தனது வீட்டு ஷோபாவில் அலங்கரித்து வைத்துள்ளார்.மேலும் கடவுள் பக்தி அதிகமாக இருப்பதால் பூஜை அறையில் விநாயகருக்கு என தனி இடம் ஒதுக்கீடு செய்து வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement