• Jan 19 2025

நடிகர் விஜயகாந்த் 120 தடவை பார்த்த திரைப்படம் எது தெரியுமா?- அடடே அவ்வளவு பிடிக்குமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். 90களில் பிரபல்யமான நடிகராக இருந்தாலும் அதிக சம்பளம் வாங்காமல் நடித்த நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.தனக்குக் கிடைப்பதைப் போலவே தன்னுடன் வேலை செய்பவர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற கொள்கையையும் கொண்டவர்.

இவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார்.இவரது இறப்பு திரையுலகத்தினரிடையே பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.இவரின் சமாதிக்கு நேரில் சென்று திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.


அத்தோடு இவர்  இறந்ததில் இருந்து அவரைப் பற்றிய புதிய தகவல்களும் வைரலாகி வருகின்றது.அப்படி நடிகர் விஜயகாந்த் ரசித்து பார்த்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் விஜயகாந்த் பேசும்போது, என் வீட்டுக்கு அருகே எங்க வீட்டு பிள்ளை படம் ஓடியபோது சண்டை காட்சிகளுக்காகவே 120 முறை அப்படத்தை பார்த்தேன்.


எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், மகாதேவி, அரசிளங்குமாரி போன்ற படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் அதன்பின் அவர் படங்களில் இல்லையே என நினைத்தேன். அப்போது வந்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.அந்த படத்தை 70 முறை பார்த்தேன். நானும் எம்.ஜி.ஆரின் ரசிகன் இல்லை.. வெறியன்’ என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement