தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக திகழ்பவரே கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன், ராம் ,அறை எண்305ல் கடவுள் போன்ற படங்களில் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு தனது எதார்த்த நடிப்பால் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட நடிகர்.
இவர் பற்றிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது , போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான காணப்பட்டது. இதனால் கஞ்சா கருப்பு மக்களோடு மக்களாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
அதாவது , அந்த அரச மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்துள்ளார்கள். அத்துடன் அந்த மருத்துவ மனையில் காலையில் 7 மணியில் இருந்து நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள் அவர்களோடு இணைந்து நடிகர் கஞ்சா கருப்பும் வந்திருந்தார். எனினும் மருத்துவம் பார்ப்பதற்கு எந்த வைத்தியரும் இல்லாததால் கோபமடைந்த கஞ்சா கருப்பு போராட்டத்தை மேற்கொண்டதுடன் சமூக ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகின்றார்.
Listen News!