திரை உலகின் முன்னணி நடிகரான கமலஹாசன் கடந்த 3 மாத காலங்களாக வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கியிருந்தார். தற்பொழுது இந்தியாவிற்கு திரும்பி வந்த கமலஹாசன் அமைச்சர் சேகர் பாபுவினை சந்தித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இவ்வாறு முக்கிய தலைவர்களிடையே சந்திப்புக்கள் ஏற்பட்டுக் கொள்ளுதல் அரசியல் ரீதியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுகின்றது. அந்த வகையில் தற்போது கமலஹாசனின் சந்திப்பும் அப்படி ஒரு மாற்றத்துக்காகவே என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக , ம.நீ.ம கட்சியின் தலைவரான கமலஹாசன் 2026ம் ஆண்டில் இடம்பெறவுள்ள அரசியல் நடப்பு தொடர்பாக கதைக்கவே அமைச்சரிடம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளத்துடன் ராஜசபா எம்பியாக மாநிலங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் கமலஹாசனின் ரசிகர்கள் மற்றும் கட்சிகாரர்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அத்துடன் கமலும் மகிழ்ச்சியாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
Listen News!