பிக்பாஸ் போட்டியாளராக இருந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவரே பாலாஜி முருகதாஸ். பாலாஜி , சில வெற்றிப் படங்களில் நடித்து உள்ளார். அந்தவகையில் , டூட்ஸ், கண்மணி அன்போடு காதலன் , MRP போன்ற திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய FIRE திரைப்பட நடிப்பின் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக, சில ரசிகர்கள் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அவர் அதிகம் நடிப்பதைப் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு அவர் கூறிய பதில் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
" FIRE " திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே. சதீஷ்குமார் இயக்கிய இப்படத்தில் நடிகை ரக்சிதா மஹாலட்சுமியுடன் கவர்ச்சியாக நடித்தது ஏன் என்பது குறித்து நடிகர் பாலாஜி முருகதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.
மேலும் அந்தப் படத்தில் நல்ல கருத்து ஒன்று இருப்பதாக கூறியதுடன் டயரெக்டர் " வாழ சொன்னாரு வாழ்ந்தேன் " என்று கூறினார். அத்துடன் படத்தை படமாக பாருங்க என்றதுடன் ஒரு திரைத்துறையில் ஒரு நடிகர் வெற்றியடைய படத்தின் தேவைக்கேற்ப நடிக்க வேண்டும் இது தான் உண்மை என்றார் பாலாஜி. அது முழுவதும் டயரெக்டரின் கற்பனை எனவும் கூறியுள்ளார்.
Listen News!