• Apr 05 2025

இசைக்காக திருமண வாழ்க்கையையே முடித்துக் கொண்ட பிரபல பாடகி..! யார் தெரியுமா?

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சினிமாத் துறையில் தனது தனித்துவமான குரல் மற்றும் திறமை என்பவற்றினால் பிரபலமான வைக்கோம் விஜயலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது விவாகாரத்து வாழ்க்கை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


அந்த பேட்டியில் விஜயலட்சுமி கூறியதாவது, "எனது கணவருக்கு நான் மியூசிக் பண்ணுறது பிடிக்கவே இல்ல என்றதுடன் நான் என்னுடைய இசைப் பாதையில் முன்னேறுவதும் அவருக்கு பிடிக்கல என்று வருத்தமாகத் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து அவர் பொறாமைப்படுவார் என்றார். இதனால்தான் நம் வாழ்க்கையில் இடைவெளி ஏற்பட்டது. என் திறமையை அடக்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு விவாகரத்து என்பது தான் ஒரே தீர்வாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

இசை மீது கொண்ட பெரும் காதல், வாழ்நாள் முழுவதும் அதை தொடர விரும்பும் அவருடைய துடிப்பும், தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் பிரச்சனையாக மாறியதை வைக்கோம் விஜயலட்சுமி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் கூறியதாவது, "ஒருவரின் வளர்ச்சி , கனவுகளை புரிந்து கொள்ளாமல் அதைத்தடுக்க முயற்சிப்பது எந்த உறவையும் நிலைத்திருக்க விடாது. நான் என் இசையை விட்டு விலக இயலாது. அது என் உயிர் சுவாசம் போல," என்றார்.


விவாகரத்திற்கு முன்பு தான் எவ்வளவு மன அழுத்தத்துடன் வாழ்ந்தார் என்பதையும் அவர் மிக உருக்கமாக விபரித்தார். "அவருடன் இருக்கும் போது நிம்மதி இல்லாமல் இருந்தேன். எதை மனமார செய்தாலும் அதற்கு பாராட்டுப் பெற முடியாமல், எதிர்ப்பும் விமர்சனமும் தான் கிடைத்தது. விவாகரத்திற்கு பிறகு தான் நிம்மதியை உணர்கின்றேன். இன்று நான் மீண்டும் என் வாழ்க்கையை ஆசையோடும், ஆர்வத்தோடும் வாழ்கின்றேன்," என்று விஜயலட்சுமி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விஜயலட்சுமியின் இந்த வெளிப்பாடுகள் தற்பொழுது  பெண்கள் உரிமை மற்றும் தன்னம்பிக்கை குறித்த ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது அனுபவம், இசை மீது காட்டும் அன்பு மற்றும் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய கனவுகளை விட்டுக் கொடுக்காத உறுதி என்பவற்றை பலரும் பாராட்டுகின்றனர்.

Advertisement

Advertisement