சமீபத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கார் பார்க்கிங் சர்ச்சையில் கைதாகி இருக்கின்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்தவகையில், தற்பொழுது நடிகை சனம் ஷெட்டி தர்ஷன் பற்றிக் கதைத்த வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதில் அவர் கூறியதாவது, "காலையில் இருந்து தர்ஷன் பற்றிய தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. என்ன தகவல் என்று பார்த்த போது பிக்பாஸ் தர்ஷன் கைது என்று கூறப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த உடனே எனக்கு சந்தோசமா இருந்தது" என சனம் கூறியுள்ளார். மேலும் தர்ஷனால நான் நிறைய அவமானங்களை அனுபவிச்சேன் என்றதுடன் எனக்கான நியாயம் தான் இப்பொழுது நடந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.
மேலும் தர்ஷன் இடத்தில வேற யாரும் இருந்திருந்தால் அவர்களுக்காக நான் குரல் கொடுத்திருப்பேன் என்றார் சனம் ஷெட்டி. அத்துடன் ஒரு சின்ன கார் பார்க்கிங் விஷயத்தில இவ்வளவு வேகமாக காவல் துறை நடவடிக்கை எடுத்து அரெஸ்ட் பண்ணுவார்களா? என்றும் கேட்டிருந்தார். அதுமட்டுமில்லாது இந்தப் பிரச்சனைக்குப் பின்னால் இருக்கிற உண்மை விரைவில் வெளிவரவேண்டும் என்றதுடன் தப்பு செய்யாத ஒருவருக்கு தண்டனை வழங்கக்கூடாது எனவும் கூறியுள்ளார் சனம் ஷெட்டி. இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Listen News!