• Nov 19 2025

பாக்ஸ் ஆபீஸ் King யார் தெரியுமா.? ரசிகர்களை கதிகலங்க வைத்த வசூல் பெற்ற நடிகர்

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பெருமையை மீண்டும் உலக மேடையில் உயர்த்தியுள்ளார் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி. அவரின் சமீபத்திய படைப்பு “காந்தாரா சாப்டர்–1” தற்போது 2025ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக திகழ்கிறது.


இப்படம் அக்டோபர் 2, 2025 அன்று உலகளவில் வெளியானது. வெளியாகி சில வாரங்களிலேயே, படம் மாபெரும் வெற்றியைப் பெற்று, இதுவரை 818 கோடி வரை வசூலை எட்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022ஆம் ஆண்டு வெளிவந்த “காந்தாரா” திரைப்படம், இந்திய சினிமாவின் அடித்தளத்தையே குலுக்கியது. அந்தப் படத்தின் வெற்றி, கன்னட திரைப்படத் துறையை உலகளாவிய கவனத்திற்கு கொண்டு வந்தது.


அந்த வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி தானே எழுதி, இயக்கி, நடித்துள்ள “காந்தாரா சாப்டர்–1” ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த படைப்பாகும்.

படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரண்டு சென்றனர். விமர்சகர்கள் இதனை “மரபு, மதம், ஆன்மீகம் கலந்த ஒரு அனுபவம்” எனக் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement