• Apr 17 2026

எனக்கு ஏன் சாதி வெறியன்னு முத்திரை குத்துறாங்க? பா.ரஞ்சித் அதிரடிக் கருத்து.!

shali / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமூக நீதி, அடையாளம், சமத்துவம் போன்ற தலைப்புகளை வலுவாக பேசும் இயக்குநர் பா.ரஞ்சித், மீண்டும் ஒருமுறை தனது தைரியமான கருத்துகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என் மீது சமூக ஊடகங்களில் “சாதி வெறி” குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து, தற்பொழுது பா.ரஞ்சித் அளித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“அட்டகத்தி”, “மெட்ராஸ்”, “கபாலி” போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கியவர் பா.ரஞ்சித்.

அவரின் படங்களில், சமத்துவம், அடக்குமுறை போன்ற சமூகக் கேள்விகள் இயல்பாகவே இடம்பெறும். அதே நேரத்தில், அவர் கலை வடிவமாகவும், சினிமாவை மக்களின் குரலாகவும் மாற்றியிருக்கிறார்.


இப்படியான ஒரு கலைஞருக்கு எதிராக, சில விமர்சகர்கள் “சாதி வெறியன்”, “ஒரு சமூகத்தை மட்டும் முன்னிலைப்படுத்துபவர்” என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அதற்கே பா.ரஞ்சித் சமீபத்திய பேட்டியில் நேரடியாக பதிலளித்துள்ளார். பா.ரஞ்சித் தனது உரையின் போது, “எனக்கு சாதி வெறியன்னு முத்திரை குத்துறாங்க... என் படத்துல நான் மற்ற சாதிகளை பற்றி சொல்லுறேனா? நான் இந்த சாதியில இருந்து வந்தவன்னு பெருமை பேசுறேனா? இல்லன்னா மற்ற சாதிகள் எல்லாம் கெட்டவங்கன்னு சொல்லியிருக்கேனா?” எனக் கேட்டுள்ளார். 

பா.ரஞ்சித்தின் இந்த உரை வெளியாகியதும், அது சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. பல ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலர்கள் ஆகியோர் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement