• Feb 23 2025

ராமர் கோயில் கட்ட நன்கொடை கொடுத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா? வெளியானது பட்டியல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலின் திறப்பு விழா இன்றைய தினம்  படு பிரமாண்டமாக நடைபெற்றது.

இன்றைய தினம் ராமர் அவதரித்த அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவிற்கு திரையுலக பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.  

இந்த சூழலில் அந்தக் கோயில் கட்டுவதற்கு பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் முதல் டோலிவுட் நடிகர்கள்வரை நன்கொடை கொடுத்திருக்கிறார். அப்படி கொடுத்தவர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.


அதன்படி, சக்திமான் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் முகேஷ் கண்ணா. அவர் தனது தொகுதி எம்.எல்.ஏவான அதுல் பட்கல்கரிடம் நன்கொடையாக 1லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை சில வருடங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டாராம்.

அடுத்து, பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர்கள் 30 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.


அதேபோல் நடிகை ஹேமமாலினி, நடிகர் மனோஜ் ஜோஷி, டிவி நடிகர் குர்மீத் சௌத்ரி, நடிகை ப்ரணிதா, தயாரிப்பாளர் மனீஷ் முந்த்ரா உள்ளிட்டோரும் ராமர் கோயிலுக்காக நன்கொடையாக தங்களால் முடிந்த தொகையை வழங்கியுள்ளார்கள்.

இதேவேளை, பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், அனுபம் கெர், கங்கனா ரணாவத், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோரும் தெலுங்கிலிருந்து சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement