• Feb 23 2025

Maya, Aishu, Poornima-காக பேசாம இருக்கன்... நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்! அதிரடி காட்டிய நிக்சன்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றியவர் தான் நிக்சன். இவர் ராப் பாடல்களை பாடுவதில் பிரபலமானவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தமது பக்க கருத்துக்களை பேட்டியில் வழங்கி வருகின்றார்கள்.

எனினும், நிக்சன் இதுவரையில் பேட்டியொன்றும் வழங்கவில்லை, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிக் பாஸ் தொடர்பில் எந்தவித தகவலும் வெளியிடவில்லை.


இந்த நிலையில், மாயா, ஐஷு, பூர்ணிமாவுக்காக தான் பேசாம இருக்கன் என நிக்சன் கூறிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதன்படி நிக்சன் கூறுகையில், பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஒரு விஷயம் நடந்துச்சு. அது தப்பு என்று பீல் பண்ணினோம். அதனால தான் கம்பளைண்ட் கொடுத்தோம். அதுக்காக ஒரு டிசிஷன் எடுக்கப்பட்டது. ஆனா அது சரியான முடிவு தான்.


ஆனா பிக் பாஸ் வீட்டுல அப்படி முடிவு எடுத்தவங்க, வெளியில வந்ததும் எதோ ஒரு பயத்தினால நாங்க எடுத்த முடிவு தப்பு தான், என்று ஏதோ ஒரு சூழல் நிலையால் தடுமாறிட்டாங்க..

நான் அப்படி இல்லை. என்ன வந்து இன்டெர்வியூ கேட்டாங்க. ஆனா நான் இன்னும் கொடுக்கல. அப்படி கொடுக்கும் போது நான் ஸ்ட்ரோங்கா சொல்லுவன். இது தான் நடந்துச்சு என்று.. இவ்வாறு நிக்சன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement