தமிழ் சினிமாவின் நிலையான நட்சத்திரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அவரது அடுத்த பிரமாண்ட படைப்பு “கூலி” திரைப்படத்தின் ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் இணைந்து உருவாகும் இப்படம், வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் ட்ரெய்லர், பி.ஜி.எம்., மற்றும் கேரக்டர் லுக் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது ரஜினி விமானத்தில் ரசிகர்களிடம் அன்பை காட்டிய ஒரு வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ரஜினிகாந்த் ஒரு விமானத்தில் பயணிக்கும் போது அங்கிருந்த ரசிகர் "தலைவா... முகத்த பார்க்கணும்...! என்று கேட்டிருந்தார்.
அந்த குரலை கேட்ட ரஜினி, எந்த தயக்கம் இல்லாமல், எழுந்து நின்று, ஒரு புன்னகையுடன் "வணக்கம்!" என கூறியுள்ளார். ரசிகர்களுக்கு இது ஒரு நினைவில் நிற்கும் தருணமாக மாறியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி, மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
Listen News!