இளம் சாம்பியன் குகேஷ் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவரை பாராட்டி பரிசும் வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வலம் வருகிறது.

குகேஷை இன்று நடிகர் சிவகார்த்திகேயனை அலுவலகத்தில் சந்தித்த குகேஷுக்கு அவர் கிப்ட் வழங்கி பாராட்டினார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜனிகாந்தும் தனது வீட்டிற்கு அழைத்து பொன்னடை போர்த்தி பாராட்டினார். மேலும் யோகியின் சுயசரிதை புத்தகம் ஒன்றையும் அன்பளிப்பு பரிசாக கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரை சந்திப்பது பலரின் கனவாக இருக்கிறது. இந்நிலையில் குகேஷின் சாதனை அந்த கனவை நனவாக்கி உள்ளது. இந்நிலையில் அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை குகேஷ் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.
Thanks Superstar @rajinikanth sir for your warm wishes and inviting ,spending time and sharing your wisdom with us 🙏 pic.twitter.com/l53dBCVVJH
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!