வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விடுதலை 2. இந்த படம் கடந்த 20 ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆனது.
விடுதலை படத்தின் முதலாவது பாகத்தில் காமெடி நடிகரான சூரி கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். இதில் சூரியின் நடிப்பு பலரையும் பிரம்மிக்க வைத்தது. இந்த படம் சூரியின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.
தற்போது விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் 8 கோடிகளை கடந்து இருந்தது. ஆறு நாட்களில் மொத்தமாக 32 கோடிகளை வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. மேலும் கிறிஸ்மஸ் தினத்தில் மட்டும் 4 கோடிகளை வசூலித்து இருப்பதாக கூறப்பட்டது.
d_i_a
இந்த நிலையில், விடுதலை 2 படம் தோல்வியை சந்தித்துள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இவருடைய பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை 2 படம் பற்றி பலரும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் இவ்வாறு பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வழக்கமாகவே விஜய், அஜித், விஜய் ஆண்டனி என தமிழில் வெளியாகும் படங்களை மட்டும் இல்லாமல் அதன் இயக்குநர், நடிகர்களையும் தொடர்ச்சியாக ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Viduthalai 2. Flop.
Listen News!