• Jan 19 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத் தொடர்ந்து, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். 

பின்னர் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததால், காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகைக்கான விருதை அளித்தது.


இதனைத் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் இன்று இவர் தன்னுடைய 33 வது பிறந்தநளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இவரின் இன்றைய சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி  அவரின் சொத்து மதிப்பு 11 கோடி என்றும்,ஒரு படத்திற்கு அவர் ரூ 2 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும், விளம்பரம் மற்றும் இதர வருமானமாக அவருக்கு மாதத்திற்கு ரூ 2 லட்சம் வருமானம் வருவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement