• Jan 18 2025

விஜயகாந்தின் இரங்கல் செய்தியை பப்ளிசிட்டி செய்ய அஜித் எப்போதும் விரும்பமாட்டார்! பிரபல பத்திரிகையாளர் சொன்ன சீக்ரெட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி இருந்தது.

இதைத்தொடர்ந்து அவரது சமாதி சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி விஜயகாந்தின் மறைவிற்கு நேரில் செல்ல முடியாமல்  போன முன்னணி நட்சத்திரங்களும் தற்போது அவருடைய சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஜித் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை இரங்கலும் தெரிவிக்கவில்லை என்ற சர்ச்சை குறித்து, பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் மனம் திறந்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், ''நடிகர் விஜயகாந்த் மறைவை அறிந்த அஜித் உடனடியாகவே சுதீஷுக்கு இரங்கல் செய்தியை அனுப்பி, அதை பிரேமலதாவிடமும் தெரிவிக்க சொல்லிவிட்டார். 

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அஜித் வராததற்கு காரணம் ஷூட்டிங்தான். அவ்வாறு அவர் வந்திருந்தால் மூன்று நாட்கள் கேப் விழும். இது விடாமுயற்சி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் இடையூறை ஏற்படுத்து என்ற காரணத்தால்தான் அவர் வராமல் இருந்திருக்கிறார். 


அதேவேளை, இரங்கல் செய்தி என்பது அஜித்துக்கும் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கும் இடையில் உள்ள விஷயம். அதை பப்ளிசிட்டி செய்வதை அஜித் எப்போதும் விரும்பமாட்டார்" என்றார். 

இதேவேளை, விவேக் மறைவுக்கு அன்று இரவே வந்து அஜித் அஞ்சலி செலுத்திய அஜித்,  எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கும் மறுநாள் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி டீ=செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement