தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் மிகவும் பெருமைக்குரிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுனிசெஃப் இந்தியா அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான தூதராக (UNICEF India Child Rights Ambassador) சேர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் விரைவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்த நியமனத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது, “யுனிசெஃப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன். குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய பொறுப்பு மற்றும் நம்பிக்கை. இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் பெருமை கொள்கிறேன்.”எனக் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து, கீர்த்தி சுரேஷின் சமூக சேவைக்கான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இவர் தன்னுடைய புகழையும், செல்வாக்கையும் குழந்தைகளின் நல்வாழ்விற்காக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!