விஜய் டிவி பிரபலமான திவ்யதர்ஷினி காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழக்கியுள்ளார். மேலும், நள தமயந்தி, பவர் பாண்டி உட்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், யோஸ்வா என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் பெண்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லும் வகையில் அவர் நடித்துள்ளமை பலராலும் பாராட்டப்பட்டது.
அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் தான் நடித்தேன். ஆனால் அது மக்கள் மத்தியில் நன்றாக கொண்டு சேர்த்தது. இது போன்ற வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன் என்று அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திவ்யதர்ஷினி. ஆனாலும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூன்று வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
இந்த நிலையில், தற்போது தனது விவாகரத்து தொடர்பில் மனம் திறந்து பேசி உள்ளார் திவ்யதர்ஷினி. அதன்படி அவர் கூறுகையில்,
என் வாழ்க்கையில் நான் விவாகரத்தை எதிர் கொண்டு இருக்கிறேன். ஆனால் விவாகரத்தான ஒருவர் என்பதை மக்கள் ஒருபோதும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. நான் தான் அதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.
என் விவாகரத்து வாழ்க்கையில் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தந்தது. அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்து அந்த முடிவை எடுத்தேன். அப்போது என் சூழ்நிலைகளும் அதற்கு உதவியாக இருந்தது.
ஆனால் அதுவும் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் தான். எனக்கு விவாகரத்து ஆன பிறகு மிக கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் அதிலிருந்து மீண்டு வர நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன்.
ஒரு தடவை ரம்யா கிருஷ்ணன் உடன் பேட்டிக்கு தயாராக இருந்த போது தான் எனக்கு விவாகரத்து உறுதியானது என்று தெரியவந்தது. அப்போது என் மனதிற்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று உணர்ந்தேன்.
உண்மையில் விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருப்பவரை விட என்னை அதிகமாகவே பாதிக்கும். காரணம் நான் மீடியா வெளிச்சத்தில் இருக்கின்றேன். அதன் விளைவுகளை நான் தான் எதிர் கொள்ளப் போகின்றேன் என்று எனக்குள் சொல்லி முடித்துவிட்டு ரம்யா கிருஷ்ணனை பேட்டியெடுக்கச் சென்றேன் என்று கூறியுள்ளார்.
Listen News!