• Jan 19 2025

அமலாபாலுக்கு அதற்குள் குழந்தை பிறந்துவிட்டதா? குழந்தையின் க்யூட் புகைப்படம்..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

நீலத்தாமரா என்னும் மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால். தமிழில் மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். இப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன.

மேலும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 


இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் தேசாய் என்பவரை திருமணம் செய்து, இரண்டே மாசத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படத்துடன் அறிவித்து இருந்தார்.


அதன்பின் கணவருடன் யோகா செய்வது, சுற்றுலா செல்வது, பார்ட்டிக்கு போவது என தொடர்ந்தும் தனது சந்தோசத்தை புகைப்படங்கள் மூலம் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போது கையில் குழந்தை ஒன்றுடன் போஸ்ட் கொடுத்துள்ளார் அமலாபால். குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதை பார்த்த ரசிகர்கள் அமலாபாலுக்கு 7 மாசத்துலையே குழந்தை கிடைச்சிட்டா? என தமது கருத்துக்களை ஆச்சரியமாக பதிவிட்டு வருகிறார்கள். ஆனாலும் குறித்த குழந்தை அவருடையது அல்ல, அவர் உறவினருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement