• Jan 19 2025

ஃபர்ஸ்ட் நைட் லுக்கில் கேம் சேஞ்சரான ஹீரோ லோகி! கண்ட்ரோல் பண்ணும் ஸ்ருதி! அதிரடி அறிவிப்பு ரிலீஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கமலின் மகளும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு சுயாதீன பாடலை வெளியிடுவதாக அண்மையில் அறிவித்தது.

விக்ரம் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும்  ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டாவது தடவையாக இணைந்துள்ளது. இதில் ரோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகம் ஆகிறார்.

நவீன காலத்தில் நகர்ப்புற காதலின் அனைத்து நிலைகளையும் அதற்கேற்ற இறக்கங்களுடன் வெளிப்படுத்துவது தான் இந்த 'இனிமேல்' பாடல். ஸ்ருதிகாசன் பாடி இசையமைத்துள்ள இந்த பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளாராம்.


இந்த நிலையில், 'இனிமேல்' பாடலின் டீசர் நாளை மாலை 06.30 மணி அளவில் வெளியாகும் என சற்று முன் தகவல் வெளியாகி  உள்ளது.

இதே வேளை, குறித்த போஸ்டரில் லோகேஷ் கனகராஜ் மாப்பிள்ளை போல வேட்டி சட்டை, கையில் பூமாலை என கேம் பிளேயராக ஒரு பக்கம், ஸ்ருதியும் மணப்பெண்ணாக பட்டு சாரி கேம் பிளேயராக இன்னொரு பக்கம் காணப்படுகிறார். இதனை பார்க்கும் போதே நாளைக்கு தரமான சம்பவம் இருக்குன்னு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எனவே லோகேஷ் கனகராஜின் புதிய அவதாரத்தை காண்பதற்கு ரசிகர்கள் பெரும் ஆவலாய் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement