அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘குட் பேட் அக்லி’. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்டோர் நடித்தனர்.படத்தின் பாடல்கள் குறிப்பாக ‘பஞ்சு மிட்டாய்’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘தூதுவளை இலை அரைச்சு’ போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த மூன்று பாடல்களும் தான் எழுதியவை என்றும் அவை அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது "புதிய இயக்குநர்களிடம் சொந்தமான புது பாடல்களை உருவாக்கும் ஆற்றல் இல்லை போலிருக்கிறது. இப்போதைய தலைமுறையில் இளையராஜா, தேவா போன்றோரின் கற்பனை திறன் இல்லை. பழைய பாடல்களை அனுமதி கேட்டு பயன்படுத்தலாம். ஆனால் யாரும் அனுமதி கேட்கவே இல்லை. எனவே விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என கூறியுள்ளார்.
Listen News!