• Apr 02 2025

மாமியார் முன்னிலையில் மகனுக்கு கிஸ் அடிச்ச மருமகள்! அண்ணாமலை செய்த காரியம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரவி, ஸ்ருதியிடம் என்ன சண்டை என துருவி துருவி கேட்க, இருவரும் ஒன்றும் இல்லை என சொல்ல விஜயா குழம்புகிறார். ஸ்ருதி போகும் போது ரவியை இழுத்து கிஸ் பண்ணுகிறார். இதை பார்த்து விஜயா இந்த பணக்கார பசங்களே இப்படி தான் இருப்பாங்களா என புலம்புகிறார்.

மறுபக்கம் மீனா வீட்டிற்கு பூ மாலை கட்டுவதற்காக அவர் அழைத்த ஆட்கள் வர, அங்கு வந்த விஜயா மீனாவே ஒரு வேலைக்காரி, இங்க இருந்து அவர்களை கிளம்புமாறு திட்ட, அவர்கள் விஜயாவை வெளுத்து வாங்குகிறார்கள். இதைக் கேட்டு நைசாக நழுவிச் செல்கிறார் விஜயா.


இதை தொடர்ந்து மனோஜ் ரோட்டில் நடந்து வர, அவருக்கு கடன் கொடுத்த பார்க் நண்பரும் வருகிறார். இதை பார்த்து மனோஜ் ஓட்டம் எடுக்க, அவர் மனோஜை பிடித்து இனி என்னை பார்த்து ஓட வேண்டாம். உன்ட மனைவி வாங்கின காச வட்டியோட கொண்டு வந்து தந்திட்டா என சொல்கிறார். வீட்டுக்கு வந்த மனோஜ் ரோகிணியை கட்டிப்பிடித்து இனி நமக்குள்ள ஒரு ஒளிவு மறைவும் இருக்க கூடாது என சொல்கிறார்.

அதன்பின், மீனாவும் முத்துவும் பூக்களை கொண்டு வர, அண்ணாமலை அவர்களை வீட்டுக்குள் வைத்து பூ கட்டுமாறு எல்லாரையும் அழைக்க, விஜயா ஒன்றும் செய்ய முடியாமல் கோவத்தில் இருக்கிறார்.

Advertisement

Advertisement