• Mar 31 2025

இதெல்லாம் ஒரு வீடு.. இதுக்கு ஒரு திறப்பு விழாவா? விஜய் ரசிகர்களை கலாய்த்த அஜித், சூர்யா ரசிகர்கள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீட்டின் புகைப்படத்தை பார்த்த அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்இதெல்லாம் ஒரு வீடாஎன சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு வீடு கட்டி தர முடிவு செய்யப்பட்டது. இதற்காக விலையில்லா வீடு என்ற திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு சுமார் ஏழு வீடுகளை தமிழக வெற்றிக் கழகம் தானமாக வழங்கியுள்ளது.

இந்த வீடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். இந்த வீட்டின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீட்டை பார்த்த அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்இதுக்கு பேர் வீடா? பெட்டிக்கடை கூட இதை விட பெருசா இருக்கும், இரண்டு கம்பை நட்டு, மேலே ஒரு ஓடு போட்டால் அதற்கு பெயர் வீடா? என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும் இந்த வீட்டில் நீ தங்குவியா? என்றும் மீம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.



ஆனால் அதே நேரத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவீடே இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வீடு ஒரு மாட மாளிகை தான், இலவசமாக கொடுப்பதை கிண்டல் செய்யாதீர்கள்என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

மொத்தத்தில் இலவச வீடு வழங்குவது என்ற திட்டத்தை ஓரளவு சுமாரான வீடாவது கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் இப்படி ஒரு வீட்டை கட்டி கொடுத்து பொதுமக்களை அவமதிக்க வேண்டாம் என்றும் பொதுவான கருத்து நிலை வருகிறது.

Advertisement

Advertisement