படங்களில் காமெடி நடிகராக நம்மை நகைச்சுவையால் ரசிக்க வைத்த நடிகர் தாமு, சமீபத்தில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களிடம் உரையாற்றினார். ஆனால் அந்த உரை காமெடியைத் தொட்ட பேச்சாக இல்லாது... உண்மையைச் சொல்லும் தத்துவச் சொற்பொழிவு போல அமைந்திருந்தது.

அதில் அவர் கூறிய தத்துவ வாக்கியங்களும், பெற்றோர்களின் ஆசிர்வாதம் குறித்து கூறிய வார்த்தைகளும் மாணவர்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தாமு தனது உரையில்," மைனா படத்தில ஹீரோவும் ஹீரோயினியும் அப்படி லவ் பண்ணுவாங்க.. ஆனா, அவங்க ரெண்டு பெரும் இறந்திடுவாங்க. ஏன்னா ரெண்டு பேரோட பெற்றோரும் மண்ண வாரி சாபம் போட்டிருப்பாங்க... பெற்றோர்களின் ஆசிர்வாதம் இல்லன்னா எவ்வளவு பெரிய லவ்வா இருந்தாலும் அவங்க வாழ்க்கை சரியா அமையாதுன்னு... பிரபு சாலமன் அழகா சொல்லியிருப்பார். இதைத் தான் மாணவர்களுக்கும் உதாரணமா சொல்லுவேன்." என்று கூறியுள்ளார்.

அவர் இந்த உரையை உணர்ச்சிபூர்வமாகவும், அழகான சினிமா உதாரணம் மூலம் எடுத்துரைத்த விதம் அனைவரையும் சிந்திக்க வைத்தது.
அவரின் கருத்து படி, எந்த ஒரு உறவாக இருந்தாலும், அது பெற்றோர்களின் அனுமதி, ஆசிர்வாதம், பாசம் கொண்டு அமைந்தால் தான் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இந்நிலையில் தாமு கூறிய கருத்துகள் மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Listen News!