• Oct 29 2025

பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்த ஹவுஸ்மேட்ஸ்..! வெளியான Unseen வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ளது.  பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் கட்டாயம் இடம் பெற்று இருப்பார்கள்.  இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுக்கு  பஞ்சமில்லை என்று தான் கூற வேண்டும். 

இந்த சீசன் ஆரம்பித்து ஐந்தாவது நாளிலேயே எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை எனக் கூறி நந்தினி வெளியேறினார். அவருடைய செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  பலர் வாய்ப்பை தேடி அலைந்து கொண்டிருக்க கிடைத்த வாய்ப்பை வேஸ்ட் பண்ணி விட்டாரே என்று பலரும் நந்தினியை திட்டினார். 

இதைத்தொடர்ந்து முதல் வாரம் இடம்பெற்ற எலிமினேஷனில்  பிரதீப் காந்தி வெளியேறினார். இவர் மக்களிடம் கம்மியான வாக்குகளை வாங்கி எலிமினேட் ஆனார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் திவாகருக்கு  அதிக ஆதரவு மக்களால் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு அடுத்து சபரி,  ஆதிரை,  பார்வதி ஆகியோருக்கும் இறுதி இடத்தில் கெனி மற்றும்  அப்சரா ஆகியோரும் காணப்படுகின்றனர். 


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 ன் unseen வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்  ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் ஒன்றாக இருக்க  கம்ருதீனும் பார்வதியும் அலப்பறை செய்கின்றார்கள்.


அதன்படி பார்வதி  கம்ருதீனிடம், இட்லி மாதிரி இருக்கிற நான் தான் உன்னோட ஃபேவரிட் என்று சொன்னேன்ல...  இப்ப அரோரா பின்னாடி போறா.. என்று சொல்ல,  நீ இட்லி மாதிரி இருக்க... அவ குஷ்பூ இட்லி மாதிரி இருக்க.. என்று கம்ருதீன் சொல்லுகின்றார். 

இதை தொடர்ந்து விக்கல்ஸ் விக்கியும்  வியானாவும் பேச ,  அதில் வியானா, ஒருத்தர் ஒன்னு ஒன்னு பண்ண...  அதை இன்னொருத்தர்  இன்னொன்னு பண்ண..  திடீர்னு பார்த்தா பாசமலர் ஆகிட்டாங்க.. என்னடா இது கூத்தா இருக்கு...   என்று சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

அதன் பின்பு  மாடுனா என்னன்னு தெரியுமா என்று சொல்லி கானா வினோத்தை துஷார் நடித்துக் காட்ட சொல்லுகின்றார். அதில்  வினோத் மாடு போல நான்கு கால்களில் இருந்து  நடந்து காட்டியதோடு, எல்லோருக்கும் நல்ல சீனு கொடுத்தியே.. எனக்கு மட்டும்  மாட கூப்பிட்டு பண்ணுறியே... என்று  தனது பாணியில் பாடி காட்டியுள்ளார். இதனால் பிக் பாஸ் வீடு கலகலப்பாக உள்ளது .

Advertisement

Advertisement