• Nov 22 2025

விஜயாவின் ஒரிஜினல் மகள் இவங்களா.? பர்த்டே ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இதனால் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பரீட்சியமாக காணப்படுகின்றனர்.  

அதிலும் வில்லி கேரக்டரில்  நடிக்கும் விஜயா, ரோகிணிக்கு  நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.  அதேபோல அவர்களை திட்டுபவர்களும் உள்ளனர். 

இந்த சீரியலில் விஜயா தன்னுடைய 3 மகன்களில் மனோஜ் மற்றும் ரவிக்கு மட்டுமே அதிக பாசம் காட்டுகின்றார். அவர்களுக்கு ஒன்று என்றால்  துடித்து போகின்றார். ஆனால் முத்து மேல்  கோபத்தை மட்டுமே காட்டிக் கொண்டுள்ளார். 


ஆரம்பத்தில் ரோகிணி பணக்கார வீட்டு பெண் என்று அவருக்கு ஆதரவாக இருந்தார். அதற்கு பின்பு அவர் பற்றிய உண்மைகள் தெரிந்ததால்  அவரை தாழ்வாக நடத்தி வருகின்றார். அதுபோலவே ஸ்ருதியும் பணக்கார வீட்டுப் பெண் என கவனித்து வருகின்றார். 

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடிக்கும் நடிகை அனிலா ஸ்ரீகுமார்  தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில்  தனது மகளின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். 

தற்போது  தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிலா. அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement