• Jan 18 2025

சலூன் கடை வைக்க போகிறாரா கேபிஒய் பாலா? அவரே சொன்ன ஆசையை பாருங்க...!!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமான ஒருவராக காணப்படுபவர் தான் KPY பாலா.

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் முன்னுக்கு வந்தவர். வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதை  தவிர தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏழை மக்களுக்கு தன்னிடம் இருந்து இயலுமானவரை அள்ளி அள்ளிக் கொடுத்த கலியுக கர்ணனாக தற்போது பெரிதும் பேசப்படுகிறார்.


சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். தன் சொந்த செலவில் மக்களுக்காக 5வது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்தார், மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். பெற்றோல் பங்கில் வேலை செய்த ஏழை இளைஞனுக்கு பைக், கடந்த மாதம் லோரன்ஸ் உதவியுடன் பெண் ஒருவருக்கு ஆட்டோ வாங்கிக்கொடுத்தார்.


இவ்வாறு கடந்த 18 நாட்களுக்குள் 25 லட்சம் மட்டில் இவர் உதவி செய்ததாக பெரிதும் பேசப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான பாலாஜியின் சலூனுக்கு விசிட் அடித்துள்ளார்  பாலா. குறித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

மேலும் தனக்கும் சின்ன வயதில் இருந்து சலூன் வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தெரிவித்து உள்ளார்  KPY பாலா.



Advertisement

Advertisement