• Jan 19 2025

CWC Season 5 போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

மக்களை சமையல் நிகழ்ச்சி மூலமும் வயிறு குலுங்க மகிழ்விக்கலாம் என்று நிரூபித்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருவதோடு தற்போது இதன் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 5 தற்போது புதிய நடுவர்கள், புதிய கோமாளிகள் என புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பிப்பதற்கு முதலே பல பிரச்சினைகள் தோன்றினாலும் அதை எல்லாம் கடந்து இந்த சீசன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி முதல் வாரத்திலேயே அதில் பங்கு கொண்ட விஜய் டிவி பிரபலம் ஒருவர்  வெளியேறி இருந்தார். எனினும் தனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது சமையல் திறமையை வெளிப்படுத்தி வரும் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பள விபரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி டிடிஎஃப் வாசனின் காதலியாக காணப்படும் ஷாலினி சோயாவின் சம்பளம் ஒரு எபிசோடுக்கு 10 ஆயிரம் என்று கூறப்படுகிறது.


அதுபோல ஜீ தமிழ் சீரியல் நடிகர் அக்ஷய் கமலுக்கு ஒரு எபிசோடுக்கு பத்தாயிரம் ரூபாயும், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் நடிகர் வசந்த் வஷி ஆகியோருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.

மேலும் செய்தி வாசிப்பாளராக இருந்து கதாநாயகியாக மாறிய திவ்யா துறைசாமி ஒரு நாளைக்கு 12000 பெறுகின்றார். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலமான பூஜா வெங்கட் ஒரு எபிசோட்க்கு 9000 ரூபாவும், இர்பான் மற்றும் காமெடி நடிகர் விடிவி கணேஷ் ஆகியோருக்கு 15 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்படுகின்றதாம்.

இவர்களைத் தொடர்ந்து நடிகை சுஜிதா மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோருக்கு 18000 ரூபாயும் வழங்கப்படுகின்றது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement