• May 20 2024

‘தக்லைஃப்’ படத்தின் மாஸ் அப்டேட்.. எதிர்பார்த்தது போலவே மிரட்டிய சிம்பு போஸ்டர்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய போஸ்டர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டரின் மூலம் ‘தக்லைஃப்’ படத்தில் சிம்பு இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிம்பு இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான போஸ்டர் அதனை உறுதி செய்துள்ளது.

சிம்புவின் அட்டகாசமான தோற்றத்துடன் அவர் துப்பாக்கியை கையில் வைத்தவாறு இருக்கும் போஸ்டர் சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் மற்றும் சிம்பு முதன்முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், அசோக் செல்வன், த்ரிஷா உள்பட பலர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது சிம்புவும் இணைந்துள்ளது படத்தின் வியாபாரத்திற்கு மிகப்பெரிய கூடுதல் அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement