• Jul 27 2024

விஜய், சூர்யாவுடன் தாக்கு பிடிக்க முடியவில்லை... மார்க்கெட்டை இழந்தேன்! சத்யராஜ் பகிர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

1980 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகராக கலக்கியவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் தற்போதும் குணசித்திர நடிகராக வலம் வருகின்றார்.

ஆரம்பத்தில் வில்லன், காமெடி, தயாரிப்பாளர், ஹீரோ என தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்திய சத்யராஜ், தற்போது வரையில் 45 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையில், நடிகர் சத்யராஜ் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், நான் இறுதியாக ஹீரோவாக நடித்த பத்து படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஒரு  படம் வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு ஹீரோதான் பொறுப்பு. இதனால் கேட்ட சம்பளத்தை தர மாட்டாங்க. படம் நல்லா போகலாட்டி கொடுத்த அட்வான்சையும் திரும்ப வாங்கிட்டு போயிடுவாங்க. அதற்கு காரணம் நல்ல கதைகளை நான் சரியாக தேர்வு செய்யாததால் மார்க்கெட்டும் போய்விட்டது.

நான் ஹீரோவாக நடித்த நேரத்தில் தான் அஜித், சூர்யா, விஜய் என இளம் நடிகர்கள் நடிக்க வந்தார்கள். அவர்களின் படங்கள் ஓடின. அந்த நேரத்தில் என்னால் அவர்களோடு தாக்கு பிடிக்க   முடியவில்லை. இதனால் 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு குணச்சித்திர கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்ததும் ஓகே பண்ணி விட்டேன்.

நான் அறிமுகமானது என்னவோ வில்லன் கேரக்டர் தான். அதற்குப் பிறகு நடிகனாக பொம்ம குட்டி அம்மா படத்திற்கு பிறகு ஹீரோவாக நடித்து ஹீரோவாகி விட்டேன். அதன் பிறகு வில்லனாக நடிப்பதை நிறுத்தினேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement