• Oct 08 2024

'வாழை' படத்தை பாராட்டிய முதலமைச்சர்... நெகிழ்ந்த மாரி செல்வராஜ்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அண்மையில் கோலிவுட்டில் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'வாழை'. இப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது மாரி செல்வராஜின் நான்காவது படைப்பாக 'வாழை' படம் அண்மையில் ரிலீசானது. அவரின் பயோகிராபியாக வெளியான இப்படம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக திரையுலகை சார்ந்த பிரபலங்களும் 'வாழை' படத்தினை நெகிழ்ச்சியாக பாராட்டி தள்ளினார்கள்.


இந்நிலையில் 'வாழை' படம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி


பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 



Advertisement