• Jan 07 2026

பராசக்திக்கு திமுக ஆதரவு.? எஸ்.கே வண்டி நேக்கா ஓடுது.! முக்கிய பிரபலம் அதிரடி ட்வீட்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பொங்கல் ரேஸில் இம்முறை  விஜயின் ஜனநாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் ரிலீஸ் ஆகவிருக்கின்றன. இதன் காரணமாக இந்த வருடம்  விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே போட்டி தொடங்கியுள்ளது.  இதில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு  அனைவரிடமும் காணப்படுகின்றது. 

அதே நேரத்தில் இவர்களுடைய ரசிகர்களும்  தங்களுடைய  வெறுப்பை வெளிக்காட்டி வருகின்றனர். அதன்படி  மதுரையில் தியேட்டரில் இருந்த பராசக்தி பேனர்களை  விஜய் ரசிகர்கள்  கிழித்தெறிந்துள்ளனர்.   

சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் அக்டோபருக்கு ரிலீஸ் ஆக இருந்தது.  ஆனால் அந்த மாதம் விஜயின் ஜனநாயகனும் ரிலீஸ் ஆக இருந்ததால் பராசக்தி பொங்கலுக்கு தள்ளிப்போனது. 


எனினும் அதன் பிறகு ஜனநாயகன் திரைப்படமும்  பொங்கலுக்கு தள்ளிப்போனது. இப்படி இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகளிளும் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்கள் இருந்து வந்தன.  ஒரு வழியாக ஜனநாயகனை ஜனவரி ஒன்பதாம் தேதியும், பராசக்தியை  10 ஆம் தேதியையும்  ரிலீஸ் பண்ணுவதற்கு  முடிவெடுத்தனர். 

மேலும் விஜயுடன் போட்டி போடுவதற்காக சிவகார்த்திகேயன் தான் ரிலீஸ் தேதியை மாற்றினார் என்ற பேச்சும் அடிபட்டன. ஆனாலும் பராசக்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்கான விளக்கத்தை கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். 

இந்த நிலையில்,  ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பதிவில்,  அமரன் படத்துக்கு பாஜக ஆதரவு, பராசக்திக்கு திமுக ஆதரவு.. நம்ம வண்டி நேக்கா ஓடுது.. இனி நான் தான் தமிழ் சினிமாவோட விஜய்.. நான் தான் 2031 சிஎம்.. என  பதிவிட்டு திடீர் தளபதி என சிவகார்த்திகேயனை குறிப்பிட்டுள்ளார்..  தற்பொழுது அவருடைய பதிவு இணையதளங்களில் வைரல் ஆகி உள்ளன. 


 

Advertisement

Advertisement