• Feb 03 2026

பணப்பெட்டி டாஸ்கில் என்ட்ரியான வியானா.! மீண்டும் காருக்காக மோதிக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் 91 நாட்களை கடந்து விட்டது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆறு பேர் தான் மிஞ்சி இருக்கின்றனர்.  கடந்த வாரம் கமருதீன், பார்வதி ஆகிய இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எலிமினேஷனில் வெளியேறியிருக்கின்றார்.

இந்த நிலையில்,  இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில், மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் வியானா. மேலும் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இம்முறை சற்று வித்தியாசமாக பணப் பெட்டியில் தேவையான பணத்தை சேர்க்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு என போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

மேலும், உங்களுக்கு எப்ப பெட்டிய எடுக்க வேண்டும் என்று தோணுதோ அப்ப பெட்டிய எடுத்தா போதும்..  அதோட உங்க பயணம் இந்த வீட்டில் முடியும்.  அதன்படி கார்டன் ஏரியால ஒரு கார் இருக்கும். அந்த காருக்குள்ள மூன்று லட்சம் ரூபாய் பணம் இருக்கும்.


எண்ட் பஸார் அடிப்பதற்குள் கொடுக்கப்பட்ட மார்க்கில் வந்து நிற்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் எடுத்த பணம் பெட்டிக்குள் செல்லாது என  கூறப்பட்டுள்ளது.  இதன்போது அரோராவும் சபரியும் முந்தி அடித்துக்கொண்டு பணத்தை எடுத்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

ஏற்கனவே கார் டாஸ்கின் போது இடம்பெற்ற சர்ச்சையினால் தான் பார்வதியும் கமருதீனும் ரெட்கார்ட் வாங்கி வெளியேறினார்கள். தற்போது மீண்டும் காரில் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளமை வேடிக்கையாக காணப்படுகிறது.


Advertisement

Advertisement