ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்த நடிகர் விஜய் தற்போது தனது திரையுலகப் பயணத்தின் இறுதி திரைப்படமான ‘ஜனநாயகன்’ மூலம் திரையுலகுக்கு வலம் வரவுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாக இந்த திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று உலகெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம், அரசியல், குடும்பம் மற்றும் மனித உறவுகளின் நுட்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் விஜய் நடித்த பல படங்கள் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பெற்றதைப் போல, இந்த படம் அவரது கேரியரின் ஒரு முக்கிய மைல்ஸ்டோனாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. டிரெய்லர் வெளியானதும், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. படக்குழுவின் தகவலின்படி, தற்போது வரை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டிரெய்லர் 75 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Listen News!