• Jan 07 2026

இந்தி திணிப்புக்கு எதிராக கொதித்தெழுந்த சிவகார்த்திகேயன் ! தெறிக்கவிட்ட பராசக்தி டிரெய்லர்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பொங்கல் தினத்தன்று  விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ஜனநாயகன் படத்துடன் மோத தயாரான படம் தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம்.  இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில்  ரவி மோகன் வில்லன் ஆக நடிக்க, அவருடன் அதர்வா, ஸ்ரீ லீலா போன்றவர்களும் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர்.  1960 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பராசக்தி படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகிய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  சுமார் 200 வினாடிகள் ஓடும் இந்த ட்ரெய்லரில்  அதர்வா மாணவர் தலைவராகவும், ரவி மோகன் அதிகாரமிக்க காவல்துறை அதிகாரியாகவும் மிரட்டியுள்ளார். 


மேலும்  இந்த படத்தில்  ஒரு சாமான மனிதராக சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். ஒரு கட்டத்தில் அவர் எப்படி ஒரு மாபெரும் மாணவன் புரட்சியின் தலைவராக மாறுகின்றார் என்பதுதான் இந்த படத்தின் மீதி  கதையாக காணப்படுகிறது. 

அத்துடன் இந்தி தெரியாத சிவகார்த்திகேயனுக்கு ஸ்ரீ லீலா தான்  கற்பித்துக் கொடுப்பதாகவும் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.   ஏற்கனவே இந்த படத்தில் வெளியான அடி அலையே, ரத்தினமாலா போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிய உள்ள நிலையில்,  தற்போது வெளியான இந்த ட்ரெய்லரின் பின்னணி இசையும் தெறிக்க விடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement